விளையாட்டு வீர, வீராங்களுக்கு காப்புறுதியை பெற்றுக் கொடுப்பதற்காக, விளையாட்டு சங்கங்கள் இதுவரை தகவல்களை வழங்கவில்லை- தயாசிறி ஜயசேகர

297 0

 

cold160527837_3956242_19012016_sss_cmyவிளையாட்டு வீர, வீராங்களுக்கு காப்புறுதியை பெற்றுக் கொடுப்பதற்காக, விளையாட்டு சங்கங்கள் இதுவரை அவர்களின் தகவல்களை வழங்கவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

விளையாட்டு சங்கங்களின் வங்கி கணக்கு இலக்கங்கள் கோரப்பட்ட போதிலும், சில விளையாட்டு சங்கங்கள் மாத்திரமே அதற்கான பதிலை வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு தகவல்களை பெற்றுக் கொடுக்காத விளையாட்டு சங்கங்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவை இலக்காக கொண்டு பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.