நாளை ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள், யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது

274 0

president-03-01-2017ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள் செயற்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்படவுள்ள யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் நாளை ஜனாதிபதி திறந்துவைக்கப்படவுள்ளது.

ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள் செயற்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்படவுள்ள குறித்த அலுவலகம் வடக்கு மாகாண ஆளுநரின் யாழ்ப்பாண அலுவலகத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குறித்த அலுவலகம் நாளை பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதுடன், இந்நிகழ்விற்கு வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தலைமை தாங்கவுள்ளார்.

பேண்தகு யுகம் 3ஆம் ஆண்டு உதயத்தின் மக்களின் பிரச்சினைகளை வினைத்திறனான முறையில் தீரத்துவைக்கும் நோக்கில் செயற்பட்டுவரும் ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள் திட்டம் நாளை முதல் வடக்கு பிராந்தியத்தில் செயற்படவுள்ளது.

நாளை யாழ்ப்பாணம் வருகை தரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாண படைத்தலைமையகத்தில் ஓய்வுபெற்ற முப்படைகளின் உத்தியோகத்தர்களையும் சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் மரம் நாட்டும் நிகழ்வையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ளார்.