மக்கள் நேயமிக்க சேவைக்காக அனைத்து அரச பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் – ஜனாதிபதி

273 0

mythiribala-6666sநாட்டுக்கும் மக்களுக்கும் நேர்மையான முறையில் மக்கள் நேயமிக்க சேவைக்காக அனைத்து அரச பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

வன பாதுகாப்பு திணைக்கள இலங்கை தொழில்நுட்ப சேவையின் பயிற்றுவிப்பாளர் தர வட்ட வன அலுவலர்கள் மற்றும் மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சின் நிறைவேற்று தர உதவிப் பணிப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, 71 வட்ட வன அலுவலர்களுக்கும், 26 திணைக்கள ரீதியான நிறைவேற்று தர உதவிப் பணிப்பாளர்களுக்கும் நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி அரச பணியாளர்கள், நேர்மையான முறையில் மக்கள் நேயமிக்க சேவையுடன் பணியாற்ற வேண்டுமென குறிப்பிட்டார்.