சர்வதேச நீதிபதிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை – மைத்திரி

433 0

maithripala-sirisena-speakingநாட்டில் யுத்த குற்ற விசாரணை நீதிமன்றம் அமைக்கப்படும் என்று சில ஊடகங்கள் வெளியிடும் தகவல்களை தாம் முற்றாக நிராகரிப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பேராதொனியவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி இந்த கருத்தை தெரிவித்தார்.
நாட்டை கட்டியெழுப்பும் மக்களுக்கு முழுமையான பலத்தை வழங்குவதே ஊடகங்களுக்கு உள்ள மிக முக்கிய பொறுப்பாகும்.
எனினும் சில ஊடகங்களில் பொறுப்பற்று செயற்படுகின்றன.
இது வேதனை அளிக்கின்றது.
யுத்த குற்ற விசாரணை நீதிமன்றம் இன்றும் ஒன்பது மாதங்களில் என்று திவயின பத்திரிகை கட்டுரை வரைகின்றது.
சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு என்ற விடையம் முற்றாக நிராகரிக்கப்பட்ட வேண்டிய ஒன்று.
இவ்வாறு இடம்பெற எமது நாட்டின் சட்டத்தில் இடமில்லை.
என்றாலும், அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமெனின் அரசியல் அமைப்பை சீர்த்திருத்த வேண்டும்.
எனினும் அதற்கு தாம் ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.