அமைச்சை இராஜினாமா செய்தபோதும், கூட்டு எதிர்க் கட்சியுடன் சேரும் எந்தவொரு தீர்மானமும் இதுவரை இல்லையென உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
தனது இராஜினாமா தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரியங்கர ஜயரத்ன,
அமைச்சின் நடவடிக்கையினால் நான் இராஜினாமா செய்யவில்லை. நீண்ட கலந்துரையாடலின் பின்னரே நான் இந்த தீர்மானத்தை எடுத்தேன். எனது கட்சியினரும் ஆதரவாளர்களும் தொடர்ந்தேர்ச்சியாக என்னை வற்புறுத்தினர்.
அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகள் எனது தீர்மானத்துக்குக் காரணமாகியது. மத்திய வங்கியின் முறி மோசடி, சீனாவுக்கு 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வழங்குதல், விசேட அமைச்சு என்பன எனது கட்சி ஆதரவாளர்களை அதிருப்திக்கு உட்படுத்தியுள்ளன.
அவர்களின் வற்புறுத்தலே எனது இராஜினாமாவுக்குக் காரணம். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.