உள்ளுராட்சி மன்ற தேர்தலை உரிய வகையில் நடத்த வேண்டியது மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் பொறுப்பு என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
பிரதியமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அஜித் பீ.பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.
தமது கட்சிக்கு உள்ளுராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு அவசியம் இருப்பதாக எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் அசோக்க பீரிஸ் முன்வைத்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்கள் உள்ளுராட்சி தேர்தல் ஒன்றை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்தநிலையில், தேர்தலை பிற்போடுவதற்கான எந்தவொரு அவசியமும் ஐக்கிய தேசிய கட்சிக்கு இல்லை என்றும் பிரதியமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார்.