ஜனாதிபதி செயலகத்துக்கு தபால் சேவை ஊழியர்களினால் வழங்கப்பட்டுள்ள மகஜருக்கு எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் உரிய பதில் கிடைக்காது போனால், நாடு முழுவதிலுமுள்ள சகல தபால் நிலையங்களையும் மூடி பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தபால் தொழிற்சங்களின் முன்னணி அறிவித்துள்ளது.
தபால் சேவை ஊழியர்கள் வலையமைப்பின் ஏற்பாட்டாளர் சின்தக பண்டார இவ்வறிவித்தலை ஊடகங்களுக்கு விடுத்துள்ளார்.