குளியாபிட்டிய – லபுயாய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் வொக்ஸ்வேகன் சிற்றூர்ந்து உற்பத்தி தொழிற்சாலைக்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ ஆகியோரின் தலைமையில் இந்த அடிக்கல் நாட்டு நிகழ்வு இடம்பெற்றது.
வொக்ஸ்வேகன் உட்பட ஐரோப்பாவில் தயாரிக்கப்படும் பல்வேறுப்பட்ட ரக சிற்றூர்ந்துகள் இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படவுள்ளன.
குறித்த தொழிற்சாலை ஊடாக 3 ஆயிரம் நேரடி தொழில் வாய்புக்கள் கிடைக்க பெறவுள்ளன.
இதனிடையே, சிற்றூர்ந்து தொழிற்சாலை தொடர்பான பயிற்சி நிறுவனம் ஒன்றும் இதில் நிர்மாணிக்கப்படவுள்ளது.