முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னால் மஹிந்த ராஜபக்ஸவுடன் நெருங்கிய தரப்பினர்- பொதுபல சேனா

295 0

 

podu-pala-sena-03-01-2017அளுத்கம உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் நெருங்கிய தரப்பினர் இருந்தமைக்கான சாட்சியங்கள் தம்வசம் உள்ளதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

தமக்கு எதிராக செயற்படுகின்ற குழுவொன்றினாலேயே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளமைக்கான சாட்சியங்கள் காணப்படுவதாக அந்த அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்;.

தனது ஆட்சி கவிழ்க்கப்பட்டமைக்கான காரணம் பொதுபல சேனா என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அண்மையில் வெளியிட்டிருந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்;

முஸ்லிம் மக்கள் மீது திட்டமிட்ட வகையில் தாக்குதல் நடாத்தி, முஸ்லிம் சமூகத்தை தன்னிடமிருந்து பொதுபல சேனா பிரித்திருந்ததாக முன்னாள் ஜனாதிபதி அண்மையில் குற்றஞ்சுமத்தியிருந்தார்.

முஸ்லிம் சமூகத்தின் மீதான தாக்குதல் சம்பவங்களுக்கு பொதுபல சேனா மற்றும் ஞானசார தேரர் ஆகியோருக்கு தொடர்பு கிடையாது என அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே  சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது அமைப்புக்கு எதிராக உண்மைக்கு புறம்பான விடயங்களை வெளியிடும் ஊடக நிறுவனங்கள், நபர்கள் மற்றும் அமைப்புக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.