மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று இரவு நல்லிணக்கப் பொறிமுறை குறித்த கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கை

292 0

mythiribalaநல்லிணக்கப் பொறிமுறை குறித்த கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று இரவு 7 மணியளவில் கையளிக்கப்படவுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21ஆம் திகதி குறித்த அறிக்கை, ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவிருந்த நிலையில் அது பிற்போடப்பட்டதாக நல்லிணக்கப் பொறிமுறை குறித்த கலந்தாலோசனைச் செயலணியின் செயலாளர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்திருந்தார்.

இதேவேளை, குறித்த அறிக்கையை ஜனாதிபதியிடம் கைளிப்பதில் காலதாமதம் ஏற்பட்டமைக்கு தமது கட்டுப்பாட்டை மீறிய சூழ்நிலைகளே காரணமாக அமைந்துள்ளதாக நல்லிணக்க பொறிமுறைச் செயலணியின் உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், நல்லிணக்கப் பொறிமுறை குறித்த கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று இரவு 7 மணியளவில் கையளிக்கப்படவுள்ளது.

நல்லிணக்க செயலணியின் மக்கள் கருத்தறியும் குழுவின் 500 பக்கங்களைக் கொண்ட அறிக்கையே இவ்வாறு கையளிக்கப்படவுள்ளது