ஹிக்கடுவ தடுப்பூசி செலுத்தும் நிலையத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணை – சுகாதார அமைச்சர்

205 0

ஹிக்கடுவ தடுப்பூசி செலுத்தும் நிலையத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்துவதில் தங்களிற்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்த இரு குழுக்கள் மத்தியில் மோதல்கள் தடுப்பூசி மையத்தில் இடம்பெற்றன.

தடுப்பூசி செலுத்துவதற்காக சிலர் காத்திருந்தனர், அவர்கள் ஏற்கவே தங்கள் அட்டைகளை நிரப்பியிருந்தனர் இந்த நிலையில் இன்னொரு குழுவினர் தங்களிற்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என தெரிவித்தனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மோதல்கள் பெரிதாவதை தடுப்பதற்காக சுகாதார அதிகாரிகள் தடுப்பூசி செலுத்துவதை நிறுத்தி அங்கிருந்து வெளியேறினார்கள் இதன் காரணமாக தங்கள் அட்டைகளை நிரப்பியபடி காத்திருந்தவர்கள் தடுப்பூசியை பெற முடியாத நிலையேற்பட்டது இது முரண்பாடநிலை என அவர் தெரிவித்துள்ளார்.

அந்த கிராமத்தை சேர்ந்த ஒவ்வொரு தனிநபருக்கும் தடுப்பூசி கிடைக்கும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

அதிகாரிகள் சிறந்த முறையில் தடுப்பூசியை வழங்குவதை உறுதி செய்வதற்காக தடுப்பூசிபெற செல்பவர்களை பொறுமையுடனும் நிதானத்துடனும் செயற்படுமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன் இதுவே நாட்டின் நலனிற்கு உகந்த விடயம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.