நாட்டை சர்வதேச மயப்படுத்தும் செயற்திட்டத்தில் அரசாங்கம் – மஹிந்த

276 0

1043953432makindaநாட்டை சர்வதேச மயப்படுத்தும் செயற்திட்டம் ஒன்றில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

எம்பிலிபிட்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தமது ஆட்சி காலப்பகுதியில் துறைமுகம் மற்றும் வானுர்தி தளம் என்பன நிர்மாணிக்கப்பட்டன.

அவை தற்போது விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதற்காக சீனாவை குற்றம் சுமத்த முடியாது.

இந்தநிலையில் திட்டமிட்ட வகையில் நாட்டை சர்வதேச மயப்படுத்தும் செயற்திட்டம் ஒன்றில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.