களுத்துறை – வஸ்கடுவ பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் பலியாகினர்.
முச்சக்கர வண்டி ஒன்றும் பேரூந்து ஒன்றும் மோதுக் கொண்டதிலே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் மகளுமே பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த முச்சக்கர வண்டியை பெண் ஒருவரே செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.