பாகிஸ்தானிய கடல் பாதுகாப்பு கப்பல்கள் இரண்டு இலங்கை வரவுள்ளன.
நல்லெண்ண அடிப்படையில் இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நான்கு நாள் விஜயமாக இலங்கை வரும் இந்த கப்பல்கள் எதிர்வரும் 5ஆம் திகதி தொடக்கம் 8ஆம் திகதி வரையில் இலங்கையில் நங்கூரமிட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விஜயமானது இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தம் வகையில் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.