மட்டு களுவாஞ்சிக்குடியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 80 பேர் கைது

202 0

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் தனிமைபடுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் உலாவித்திரிந்தவர்கள் மற்றும் முககவசம் அணியாது சுகாதார நடமுறையை பின்பற்றாத 80 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதுடன் அவர்களில் 15 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் நீதிமன்றம் அபதாரம் விதித்துள்ளதாக இன்று சனிக்கிழமை (28) களுவாஞ்சிக்குடி காவல் துறையினர் தெரிவித்தனர்.

கடந்த 20ம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் எதிர்வரும் 6ம் திகதிவரையில் அரசாங்கம் தனிமைப்படுத்தி ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டடுள்ளது இதனையடுத்து ஊடரங்கு சட்டதை மீறி குறித்த காவல் துறை பிரிவிலுள்ள பகுதிகளில் வீதிகளில் முககவசம் அணியாது சுற்றிதிரிந்தவர்களை காவல் துறை கைது செய்யும் நடவடிக்கை ஈடுபட்டனர்.

இந்த நடவடிக்கையில் இன்று சனிக்கிழமை வரை 80 பேரை கைது செய்து அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதுடன் இதில் வழக்கு விசாரணைக்காக வியாழக்கிழமை 15 பேர் நீதிமன்றில் ஆஜரானபோது அவர்களுக்கு தலா ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா வீதம் ஒரு இலச்சத்து 50 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனா