சீன உற்பத்தியில் உருவான வை.20 ரக இரு இராணுவ விமானங்களை புதிய வருடத்தில் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இராணுவ வீரர்களை ஏற்றிச் செல்வதற்கு இந்த விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக இராணுவ உயர்மட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.
குறித்த விமானங்களை சீனாவிலிருந்து கொள்வனவு செய்வதற்கு அமெரிக்க விமான சேவை அதிகாரிகளின் அனுமதியை இலங்கை அரசாங்கம் பெற வேண்டி வரும் எனவும் கூறப்படுகின்றது.
மணித்தியாலத்துக்கு 918 கிலோமீற்றர் வேகம் பயணிக்கக் கூடிய இந்த விமானம் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடியதாக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.