கொழும்பு மாநகரசபை எல்லைக்குள் கொரோனா வைரசினை கட்டுப்படுத்தியுள்ளோம்-ருவான் விஜயமுனி

173 0

கொழும்பு மாநகரசபை எல்லைக்குள் கொரோனா வைரசினை பெருமளவிற்கு கட்டுப்படுத்தியுள்ளதாக மாநகரசபையின் தலைமை மருத்துவர் ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

நாளந்தம் கொழும்புமாநகரசபை எல்லைக்குள் 140 பேர் அடையாளம் காணப்படுகின்றனர் என தெரிவித்துள்ள அவர் நாளாந்தம் 600 பிசிஆர் சோதனைகளையும் 100 துரித அன்டிஜன் சோதனைகளையும் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

பிசிஆர் சோதனைகளிற்கு உட்படுத்தியவர்களில் 50 வீதத்திற்கும் குறைவானவர்களே நோயாளிகளாக இனம் காணப்படுகின்றனர் துரித அன்டிஜன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 15 வீதத்திற்கும் குறைவானவர்கள் நோயாளிகளாக அடையாளம் காணப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அடையாளம் காணப்படும் நோயாளிகளில் 30 வீதமானவர்கள் டெல்டா வைரசினால் பாதிக்க்பபட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகரசபை முன்னெடுத்துள்ள தடுப்பூசி செலுத்தும் திட்டமே இந்த வெற்றிக்கு காரணமாகயிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும் நகரிற்குள் தடுப்பூசியின் ஒரு டோஸினை கூட செலுத்திக்கொள்ளாதவர்கள் பத்துவீதமானவர்களே என நாங்கள் கருதுகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.