அடுத்த வாரம் முதல் சீனி விலையை குறைக்க நடவடிக்கை!

196 0

அடுத்த வாரம் முதல் சீனியின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

சந்தையில் அதிகரித்துள்ள சீனியின் விலை குறித்து வினவியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சந்தையில் ஒரு கிலோகிராம் சீனியின் விலை 210 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், சீனியின் விலையை குறைக்க முடியாது என சீனி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் நிஹால் செனவிரத்ன நேற்று தெரிவித்துள்ளார்.

மேலும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்க அவசியமான சீனி மாத்திரமே கையிருப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.