எவன்காட் தவிர்ப்பால் அரசாங்கத்திற்கு 226 கோடி ரூபாய் வருமானம்

421 0

downloadஎவன்காட் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த கடல் பாதுகாப்பு கடமைகள் பொறுப்பேற்கப்பட்டதன் பின்னர் கடந்த வருடம் 226 கோடி ரூபாய்களை அரசாங்கம் வருமானமாக ஈட்டியுள்ளது.

கடற்படை இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய கடந்த வருடம் ஆரம்பம் முதல் 6 ஆயிரத்து 371 தேடுதல்கள் கடற்படையால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 5 ஆயிரத்து 928 தேடுதல்கள் காலி துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஈட்டப்பட்ட வருமானம் அரசாங்கத்தின் ஒன்றிணைந்த நிதியத்தில் கடற்படையால் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.