கடந்த 12 மணி நேரத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து 4200 பேர் மீட்பு – வெள்ளை மாளிகை

167 0

ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த 12 மணிநேரத்தில் 4,200 பேரை அமெரிக்க ராணுவம் மீட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியன. இதையடுத்து, தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் ஆகஸ்ட் 31-க்குள் அனைத்து அமெரிக்கர்களும் தாயகத்திற்கு மீட்கப்படுவார்கள் என அமெரிக்க அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து, கடந்த 15 நாளுக்கும் மேலாக மீட்புப் பணியை அமெரிக்க அரசு துரிதப்படுத்தியது.
இதுதொடர்பாக, வெள்ளை மாளிகை  வெளியிட்ட செய்தியில், காபூலில் இருந்து கடந்த 12 மணிநேரத்தில் 4,200 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 14-ம் தேதியிலிருந்து 1,09,200 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.