ஸ்பெயினில் பெருகும் கொரோனா – உயிரிழந்தோர் எண்ணிக்கை 84 ஆயிரத்தைக் கடந்தது

156 0

ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் குணமடைந்தோர் எண்ணிக்கை 42.52 லட்சத்தை நெருங்கியுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் ஸ்பெயின் 11-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 48.31 லட்சத்தை நெருங்குகிறது. அங்கு கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 84 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும், 4.89 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.