நீதிமன்ற உத்தரவுக்கமைய செயற்படுமாறு பொல்ஹேன்கொட எலன் மெதினியாராம விகாராதிபதி உடுவே தம்மாலோக தேரருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசிங்க இன்று இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட மற்றும் சூழலியலாளர்கள் உள்ளிட்ட பிரதேச மக்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முறையிட்டுள்ளனர்.
குறித்த விகாரையில் அதிகாலை 5 மணி முதல் 6 மணிவரை ஒலிபெருக்கி பயன்படுத்தப்படுவதால் தாம் அசௌகரியத்துக்கு உள்ளாவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்க்கொள்ளப்பட்டது.
இதன்போது, உடுவே தம்மாலோக தேரர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயற்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக முறைப்பாட்டாளர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.
இதையடுத்து, பிரதிவாதிகளிடம் அறிவுத்தல் வழங்கிய கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசிங்க, ஏனையவர்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் சமய வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதேவேளை, இந்த முறைப்பாடு தொடர்பில் எதிர்வரும் 24 ஆம் திகதி சட்ட ரீதியான எதிர்ப்பை வெளியிட உள்ளதாக பிரதிவாதிகள் நீதவானிடம் தெரிவித்துள்ளனர்.