இந்தியாவுக்கு ஐ.எஸ். அச்சுறுத்தல்

303 0

isis11இந்தியாவின் கிழக்கு எல்லைகளின் ஊடாக ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஸில் இயங்கும் அல் ஜமாத் உல் முஜாஹீடீன் பங்களாதேஸ் அமைப்பினர், இதற்கான திட்டங்களை வகுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த அமைப்பினரே கடந்த ஆண்டு பங்களாதேஸ் – டாக்காவில் தாக்குதல் நடத்தி இருந்தனர்.

குறித்த அமைப்பு ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து இந்தியாவில் தீவிரவாத செயற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த குழுவுடன் இணைந்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த வருடம் ஜுலை மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

கிழக்கு எல்லைப் பகுதி ஊடான ஐ.எஸ். அச்சுறுத்தல் தொடர்பில் இந்திய பாதுகாப்பு தரப்பினர் மிகுந்த அவதானம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.