காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி சீ. அருண பிரேமசாந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மெனராகலை பிரதேச பிரதி காவல்துறை மா அதிபராக பதவி உயர்வு வழங்கப்பட்டு அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கடந்த மாதம் 29ஆம் திகதி மெனராகலை பிரதேச பிரதி காவல்துறை மா அதிபராக அவர் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவொன்றின் தீர்ப்புக்கமைய இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக உதவி காவல்துறை அதிகாரியான பவித்ர தயாராத்ன தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் நேற்று முன்தினம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.