ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கும் ஒப்பந்தத்தை கைவிடுமாறு ஜனாதிபதியிடம் கோரி இருப்பதாக ஜே வி பி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹம்பாந்தொட்டையில் எதிர்வரும் ஏழாம் திகதி வரையில் துக்க தினம் அனுஷ்டிக்கப்படுவதாக, திஸ்ஸமஹாராம – லுனகம்வெஹெர ஒன்றிணைந்த பிக்குகள் ஒழுங்கமைப்பு அறிவித்துள்ளது.
அத்துடன் துறைமுகத்துக்கு அருகில் எதிர்வரும் 7ஆம் திகதி சத்தியாகிரக போராட்டம் ஒன்றை நடத்தவிருப்பதாகவும் பிக்குகள் கூறியுள்ளனர்.
இதற்கிடையில் இந்த திட்டத்துக்கு எதிராக மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.