கொரோனாவால் பாதிக்கப்பட்ட 200 சிறுவர்கள் லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் கிசிச்சை பெறுகின்றனர்

173 0

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 200 சிறுவர்கள் கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி விஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இவர்களில் நால்வர் தீவிரகிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கையில் சிறிய அதிகரிப்பு காணப்பட்டதால் அவர்களுக்கு என இன்னுமொரு வோர்ட்டினை தயார்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறுவர்களிற்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆறுவோர்ட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன,என அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு வயதிற்கு குறைவானவர்கள் முதல் 14 வயதிற்கு உட்பட்டவர்கள் வரை 150 நோயாளிகளிறகு எங்களால் சிகிச்சை அளிக்க முடியும் கொரோனா உட்பட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட 20 முதல் 30 நோயாளிகள் நாளாந்தம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு வயதிற்கு உட்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கின்றோம்,ஏனையவர்களை வீட்டு பராமரிப்பிற்கு அனுப்புகின்றோம்,சிறிய அறிகுறிகள் உள்ள இரண்டுவயதிற்கு மேற்பட்ட சிறுவர்களை இடைத்தங்கல் பராமரிப்பு நிலையங்களிற்கு அனுப்புகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்