மருத்துவர் மரணம் – பகுப்பாய்வுக்கு உத்தரவு

365 0

633302779Untitled-2மர்மமான முறையில் விருந்தகத்தின் அறை ஒன்றில் இறந்த நிலையில் காணப்பட்ட, கம்பஹா மருத்துவமனையின் மருத்துவரின் உடல் பாகங்களை இசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு, கம்பஹா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மரணம் தொடர்பில் இடம்பெற்ற மரண விசாரணையின் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா – கிரிதிவிட பிரதேசத்தின் விருந்தகம் ஒன்றின் அறையில் இருந்து நேற்று முன்தினம், மருத்துவர் சடலமாக மீட்கப்பட்டார்.
சடலத்துடன் கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டது.
எனினும் அதில் உள்ள விடயங்கள் குறித்து இதுவரையில் தெளிவாக அறிவிக்கப்படவில்லை.
எனினும் தமது உடலை றாகம மருத்துவ பீடத்திற்கு கையளிக்குமாறு மர்மமான முறையில் மரணமாக 28 வயதான அந்த மருத்துவர் குறிப்பிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.