வடக்கு மாகாண பதில் முதலமைச்சராக பொன்னுத்துரை ஐங்கரநேசன் இன்று மதியம் 12 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.
வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் 2 வாரத்திற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்வதையிட்டு பதில் முதலமைச்சராக வடக்கு மாகாண விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் பதில் முதலமைச்சராக கடமையாற்றவுள்ளார்.