வெளிச்சத்திற்கு வந்த ஹிட்லரின் மரண ரகசியம்… ஹிட்லரின் பற்களில் செய்த ஆராய்ச்சியால் விலகிய மர்மம்!

402 0

உலக வரலாற்றில் ஹிட்லருக்கு என்று எப்போதும் முக்கியமான இடம் இருக்கிறது. ஏனெனில் அவரின் சிந்தனைகள் மற்றும் திட்டங்கள் உலகெங்கிலும் கிளர்ச்சிகளையும், போர்களையும் ஏற்படுத்தின. பல போராட்டங்களுக்குப் பிறகு 1945, ஏப்ரல் 30 ஆம் தேதி ஹிட்லர் தனது மரணத்தை தானே தீர்மானத்துக் கொண்டார்.

ஹிட்லரின் மரணம் உறுதி செய்யப்பட்டதாக இருந்தாலும் அதனைச் சுற்றி பல மர்மங்களும், வதந்திகளும் இன்றுவரை நிலவி வருகிறது. ஹிட்லர் கொலை செய்யப்பட்டதாக, அவர் சிறைபிடிக்கப் பட்டதாக, இறந்தது ஹிட்லரே அல்ல, அவர் நீர்மூழ்கிக் கப்பலில் தப்பித்து விட்டதாக பல கதைகள் கூறப்படுகின்றன. இந்த அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமீபத்தில் ஆராய்ச்சி ஒன்று செய்யப்பட்டது. அதன் முடிவுக்ளை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஹிட்லரின் மரணம் பிரெஞ்சு விஞ்ஞானிகள் அடால்ஃப் ஹிட்லரின் பற்களின் துண்டுகளை பகுப்பாய்வு செய்து, சயனைடு எடுத்து தலையில் சுட்டுக்கொண்டதால்தான் 1945 இல் அவர் இறந்தார் என்பதை நிரூபித்துள்ளார்கள். சமீபத்தில் ஐரோப்பிய மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி, இந்த மாபெரும் சர்வாதிகாரியின் பற்கள் மற்றும் மண்டை ஓட்டின் அறிவியல் பகுப்பாய்வு மூலம் அடோல்ஃப் ஹிட்லரின் மரணம் குறித்த சதி கோட்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர முயல்கிறது.

8 மாத குழந்தை கிளாடி சாராவின் இதயநோய் சிகிச்சைக்கு உதவுங்கள் ப்ளீஸ் ஹிட்லரின் முடிவுக்கான காரணம் ஏப்ரல் 1945 இன் பிற்பகுதியில், சோவியத் படைகள் பெர்லினில் நுழைந்தபோது, ஹிட்லர் தனது தற்கொலைக்கு திட்டமிட்டார், இதில் எஸ்எஸ் வழங்கிய சயனைட் மாத்திரைகளை அவரது அல்சேஷியன், ப்ளாண்டி மீது சோதிப்பது மற்றும் இறுதி உயில் மற்றும் சாசனத்தை ஆணையிடுவது என்ற முக்கிய முடிவுகளையும் எடுத்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, முசோலினி இராணுவத்தினரால்சுடப்பட்டார், பின்னர் இத்தாலியின் மிலனில் உள்ள ஒரு புறநகர் சதுக்கத்தில் பஅந்த அனைவரின் முன்னிலையிலும் தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்டார். இதேபோன்ற நிலை தனக்கு நேருவதை தவிர்க்க முடியாததாகத் ஹிட்லருக்குத் தோன்றியது. ஹிட்லரின் பிணம் 1945 ஏப்ரல் 30 ஆம் தேதி, ஹிட்லர் மற்றும் அவரது புதிய மனைவி ஈவா பிரவுன் ஆகியோரின் உடல்கள் பதுங்கு குழியில் காணப்பட்டன,

ஹிட்லரின் தலையில் தோட்டா துளை இருந்தது. ஹிட்லரின் உடல் ரஷ்யப் படையினரால் கைப்பற்றப்பட்டது. MOST READ: உங்களுக்கு பாலியல் ஆசைகள் அதிகமாக இருக்கா? அப்ப இதுதான் அதற்கு காரணமாம்… ஷாக் ஆகாதீங்க…! மீண்டும் உடற்கூறாய்வு பல மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ரஷ்யாவின் FSB இரகசிய சேவை மற்றும் ரஷ்ய அரசு காப்பகங்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு ஹிட்லரது மண்டை ஓடு மற்றும் அவரது பற்களை ஆய்வு செய்ய அனுமதி வழங்கின. மண்டை ஓட்டின் இடது பக்கத்தில் ஒரு துளை இருந்தது, அந்த துளை புல்லட் காயத்துடன் ஒத்துப்போனது,

விளிம்புகளைச் சுற்றி இருந்த கருப்பு கரியும் இதனை உறுதிசெய்தது. விஞ்ஞானிகள் மண்டையில் இருந்து மாதிரிகள் எடுக்க அனுமதிக்கப்படவில்லை என்றாலும், ஆய்வில் இவை குறிப்பிட்டது, ஹிட்லரின் மரணத்திற்கு ஒரு வருடம் முன்பு எடுக்கப்பட்ட மண்டை ஓட்டின் ரேடியோகிரா ஃபிகளுடன் அதன் வடிவம் முற்றிலும் ஒத்துப்போனது. பற்களின் ஆய்வு ஆய்வில் வெளியிடப்பட்ட பற்களின் படங்கள் பெரும்பாலும் உலோகத்தால் செய்யப்பட்ட தாடையைக் காட்டுகின்றன.

“அவர் இறக்கும் தருணத்தில்,” ஹிட்லருக்கு நான்கு பற்கள் மட்டுமே இருந்தன “என்று அவர்கள் அறிக்கையில் எழுதினர். அடிவாரத்தில் பழுப்பு நிறமாகவும், வெள்ளை டார்ட்டர் வைப்புகளுடன் இருந்துள்ளன. ஹிட்லர் ஒரு சைவ உணவு உண்பவர் என்று அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்ட கூற்றை இந்த பகுப்பாய்வு உறுதிப்படுத்தியது. சயனைடு எடுத்துக்கொண்டாரா?

துப்பாக்கியால் சுடுவதற்கு முன்பு அவர் சயனைடு எடுத்துக்கொண்டாரா என்பதை உறுதியாக நிரூபிக்க முடியவில்லை. அவரது செயற்கை பற்களில் நீல நிற படிவுகள் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள், அவரது போலி பற்களுக்கும் சயனைட்டுக்கும் இடையே சில இரசாயன எதிர்வினைகள் இறக்கும் தருணத்தில், அவரது இறுதிச் சடங்கின் போது,​​அல்லது எஞ்சியவை புதைக்கப்பட்ட போது நடந்திருக்கலாம் என்று கூறினார்கள். MOST READ: இந்தியாவில் விலைமதிப்பற்ற புதையல்கள் இருக்கும் ரகசிய இடங்கள்… இங்கெல்லாம் கூட புதையல் இருக்கா?

தொடரும் மர்மம் ஹிட்லர் அந்த பதுங்கு குழியில் இறந்ததும், அவர் தப்பிக்கவில்லை என்பதன் இதன் மூலம் உறுதிசெய்யப்பட்டது. ஆனால் சயனைடு எடுத்துக்கொண்டவர் எதற்கு துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார் என்ற கேள்விக்கான பதில் மர்மமாகவே உள்ளது. இரண்டில் எதனால் அவர் இறந்தார் என்பதை உறுதிசெய்வது மேலும் மாதிரிகள் கிடைக்காமல் சாத்தியமில்லை என்று ஆராய்ச்சியாளார்கள் கூறுகிறார்கள்.