எல்லை மறுசீரமைப்பு அறிக்கையை வர்த்தமானியில் அறிவிக்குக கஃபே கோரிக்கை

316 0

paffrelfb-415x260எல்லை மறுசீரமைப்பு அறிக்கையை விரைவாக வர்த்தமானியின் ஊடாக அறிவிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல்களுக்கான பிரசார அமைப்பான கஃபே இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது.

குறித்த அறிக்கையை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு மிகச்சிறந்த பணியை மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் அதனை விரைவாக வர்த்தமானி ஊடாக வெளிப்படுத்த வேண்டும் என்று அந்த அமைப்பின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த அறிக்கையில் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் சிலர் கைச்சாத்திடாததன் காரணமாக, அதனை அமைச்சர் பைசர் முஸ்தபா நேற்று ஏற்றுக் கொள்ள மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.