தகவலறியும் உரிமைக்கான சட்டம் பெப்ரவரி முதல் அமுல்

317 0

raight-to-knowதகவல் அறியும் உரிமைக்கான சட்டத்தை பெப்ரவரி 4 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த உள்ளதாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

புது வருடத்தை முன்னிட்டு நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமைக்கான சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தகவல் அதிகாரிகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் நியமிக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தகவல் அறியும் உரிமைக்கான சட்டம் கடந்த வருடம் ஜுன் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தின் கீழ், அமைச்சுக்கள், திணைக்களங்கள், பொது நிறுவனங்கள், உள்ளூர் அதிகாரிகள், கணிசமாக அரசு நிதி பெறும் அரச சார்பற்ற நிறுவனங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் முதலியன தகவல் அணுகல் வழங்க வேண்டும்.

அத்துடன், பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.