ஹம்பாந்தோட்டைத் துறைமுக உடன்படிக்கை குறித்து கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மஹிந்த அணி கோரிக்கை விடுத்துள்ளது.
மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன நேற்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடித்ததிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
இதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை குறித்து நீதிமன்றம் ஊடாக தெளிவுபடுத்தலை எதிர்பார்த்துள்ளதாக மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார நேற்றுத் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.