தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கபடுமா?

177 0

கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்தை தொடர்ந்தும் நீடிப்பது குறித்து நாளை தீர்மானிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொவிட் தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் நாளை காலை இடம்பெறவுள்ளது. இதன்போது இதுதொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறினார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் கடந்த 20 ஆம் திகதி இரவு 10 மணி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இது இம்மாதம் 30 ஆம் திகதி அதிகாலை 4மணியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள கால பகுதியில் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். சுகாதார வழிகாட்டல்களை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.