வெடிபொருட்களுடன் இருவர் கைது

228 0

அதிக சக்தியுடைய வெடிபொருட்களான அமோனியம் நைட்தரேட், ஜெலட் நைட் குச்சி உட்பட சில பொருட்கள் மாத்தறை மற்றும் கந்தர பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மாத்தறை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.