இந்திய சுற்றுலாப்பயணிகளுக்கு இலங்கைக்குள் நுழைய அனுமதி

151 0

செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் இந்திய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்குள் அனுமதிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

முழுமையாக தடுப்பூசி (2 டோஸ்) போடப்பட்ட இந்தியர்களுக்கு அடுத்த வாரம் முதல் எவ்விதத் தடையுமின்றி இலங்கைக்குள் நுழைய முடியும் என அவ்வமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டி ஆராச்சி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

“செப்டெம்பர் 1 முதல் கொழும்பிலிருந்து இந்தியாவின் மூன்று இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படும். சென்னைக்கு வாரத்துக்கு 4 விமானங்கள், மும்பைக்கு 3 விமானங்கள் மற்றும் பெங்களூருக்கு ஒரு விமானம் என்ற ரீதியில் இயக்கப்படவுள்ளன.

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட சுற்றுலாப் பயணிகள் மட்டுமே இலங்கைக்கு வர முடியும். அவர்கள் விமான நிலையத் தில் பிசிஆர் சோதனை செய்ய வேண்டும். தங்களுக்கு தொற்று இல்லை என்பதை நிரூபிக்கும் நபர்கள் நாட்டைப் பார்வை யிடலாம். ஆனால் அவர்கள் மூன்று நட்சத்திர ஹோட்டல்களிலும் அதற்கு மேலேயும் தங்க வேண்டும். தற்போது அவர்களுக்கு சாதாரண நடைமுறைப்படி ஒரு மாத காலத்திற்கு விசா வழங்கப்படுகிறது” என்று அவர் மேலும் கூறினார்.