சென்னையில் இருந்து திருப்பதிக்கு பயண நேரம் 30 நிமிடம் குறைகிறது

178 0

அரக்கோணம்- ரேனிகுண்டா இடையே உள்ள 67 கிலோ மீட்டர் தண்டவாளங்களின் தரம் மேம்படுத்தப்பட்டு இருவழிப்பாதை சிக்னல் திட்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரெயில்களின் வேகம் அதிகரித்துள்ளது.ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க தண்டவாளங்களின் தரம் உயர்த்தப்படுகிறது. நவீன சிக்னல்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன.சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களை இணைக்கக் கூடிய வகையில் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்படுகின்றன.

அரக்கோணம்- ரேனிகுண்டா இடையே உள்ள 67 கிலோ மீட்டர் தண்டவாளங்களின் தரம் மேம்படுத்தப்பட்டு இருவழிப்பாதை சிக்னல் திட்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரெயில்களின் வேகம் அதிகரித்துள்ளது.

இதுவரையில் 105-ல் இருந்து 110 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த பாதையில் ரெயில்கள் சென்றன. மேம்படுத்தப்பட்ட பாதையில் 130 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில்கள் இயக்கப்பட இருக்கின்றன.

இதனால் சென்னையில் இருந்து திருப்பதி மற்றும் மும்பைக்கு செல்லக்கூடிய ரெயில்கள் 20 முதல் 30 நிமிடங்கள் முன்னதாக செல்ல முடியும்.

இந்த வழித்தடத்தில் ரூ.9.45 கோடியில் தண்டவாள மற்றும் சிக்னல் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 9 ரெயில் நிலையங்கள், 17 லெவல் கிராசிங் கேட்டுகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

நவீன சிக்னல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பதால் ரெயில் பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை நடவடிக்கைகள் மிக துல்லியமாக கண்காணிக்கப்படுகின்றன.