தான் இம்மாதம் ஒரு வாரகாலம் சுவிற்சர்லாந்து பயணமாகவுள்ளதாகவும், மகிந்த ராஜபக்ஷவால் முடிந்தால் அரசாங்கத்தைக் கவிழ்த்துக்காட்டட்டும் என சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சவால் விடுத்துள்ளார்கடந்த வாரம் வெளிநாட்டு பத்திரிகையாளர் சங்கத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்களைச் சந்தித்த மகிந்த ராஜபக்ஷ 2017ஆம் ஆண்டு ஆட்சியைக் கவிழ்ப்பதே தன்னுடைய இலக்கு எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அலரி மாளிகையில் நேற்று நடந்த புத்தாண்டு நிகழ்வில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,
‘அடுத்த வாரம் நான் சுவிற்சர்லாந்து பயணம் செய்யப்போகின்றேன். அந்த ஒருவாரத்தைப் பயன்படுத்தி மகிந்த ராஜபக்ஷ ஆட்சியை முடிந்தால் கவிழ்த்துக் காட்டட்டும் எனவும் சவால் விடுத்துள்ளார்.
மகிந்த ராஜபக்ஷவுக்கு எதையும் கூறும் உரிமை உள்ளது. ஆனால் அவர் எதைச் சொன்னாலும், நான் தான் பிரதமர்’ என ரணில் தெரிவித்துள்ளார்.