ஜெயலலிதா பரிசளித்த பிரசார காரை நாஞ்சில் சம்பத் திருப்பி கொடுத்தார்

302 0

201701031146371904_nanjil-sampath-return-to-jayalalithaa-gift-innova-car_secvpfமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பரிசளித்த இனோவா காரை நாஞ்சில் சம்பத் இன்று அ.தி.மு.க. தலைமை கழகத்தில் தனது நண்பர் மூலம் ஒப்படைத்துள்ளார்.

அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளராக இருப்பவர் நாஞ்சில் சம்பத். 2 ஆண்டுகளுக்கு முன்பு ம.தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்தவர்.

அப்போது அவரது பிரசார பயணத்துக்காக ஜெயலலிதா இனோவா காரை பரிசாக வழங்கினார்.

இந்த காரில் நாஞ்சில் சம்பத் அ.தி.மு.க. பிரசார கூட்டங்களுக்கு சென்று பிரசாரம் மேற்கொண்டார்.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து நாஞ்சில் சம்பத் அ.தி.மு.க. கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒதுங்கி இருக்கிறார். தி.மு.க. சேருவார் என்று பேசப்படுகிறது.

இந்த நிலையில் ஜெயலலிதா பரிசளித்த இனோவா காரை நாஞ்சில் சம்பத் இன்று அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஒப்படைத்தார். தனது நண்பர் மூலம் காரை ஒப்படைத்துள்ளார்.

இதுபற்றி நாஞ்சில் சம்பத் ‘மாலைமலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. பிரசாரத்துக்காக எனக்கு இனோவா காரை வழங்கி இருந்தார். அதை கட்சி நிகழ்ச்சிகளுக்கு மட்டும் பயன்படுத்தினேன். எனது சொந்த உபயோகத்திற்கு எடுத்தது இல்லை.

கடந்த 8 மாதமாக பிரசாரம் எதுவும் இல்லை. அதனால் கார் சும்மா நின்று கொண்டு இருந்தது. இதனால் அந்த காரை இன்று நண்பர் மூலம் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஒப்படைத்து விட்டேன்.

கேள்வி:- அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்று உள்ளார். அடுத்து முதல்- அமைச்சராகவும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று பலர் வற்புறுத்துகிறார்கள். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- அது அவர்களது நடவடிக்கையை பொறுத்து அமையும்.

கே:- சசிகலா செல்லும் பாதை நல்ல திசை நோக்கி செல்கிறதா?

ப:- தெரியவில்லை. இப்போது எதுவும் சொல்ல இயலாது.

ப:- தை பிறந்தால் வழி பிறக்கும்.

ப:- எந்த முடிவும் எடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.