வவுனியா வடக்கில் நடமாடும் தடுப்பூசித்திட்டம்!

174 0

வவுனியா கனகராயன்குளத்தில் நடமாடும் தடுப்பூசித் திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பகுதிகளில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு  இன்று (24) காலை 8 மணிமுதல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

இதன்போது உரிய சுகாதார நடைமுறைகளை பேணி தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாத முதியவர்கள் வருகை தந்து தடுப்பூசியினை பெற்றுச் சென்றனர். வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா வடக்கு சுகாதாரவைத்திய அதிகாரி திலீபன் மற்றும்  சுகாதாரதரப்பினர் கலந்து கொண்டனர்.