அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.6 லட்சம் லஞ்சம் வாங்கிய தலைமை செயலக ஊழியர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை தலைமை செயலகத்தில் பள்ளி கல்வி துறையில் கிளர்க்காக பணியாற்றி வருபவர் நந்தகுமார்.இவர் ஊட்டியை சேர்ந்த மாணிக்கம் என்பவரிடம், பள்ளி கல்வி துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.6 லட்சம் பணம் வாங்கியுள்ளார்.
ஆனால் நீண்ட நாட்களாகியும், நந்த குமார், வேலை வாங்கி கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதுபற்றி மாணிக்கம் பல முறை கேட் டும் எந்த பயனும் இல்லாமலேயே இருந்தது.
இந்நிலையில் நந்தகுமார், மாணிக்கத்திடம் மேலும் ரூ.15 ஆயிரம் தந்தால்தான் வேலை வாங்கி தரமுடியும் என்று கூறியுள்ளார். இதனால் வெறுத்து போன மாணிக்கம் இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.இதனை தொடர்ந்து போலீசார் நந்தகுமாரை பொறி வைத்து பிடிக்க திட்டமிட்டனர்.
கோயம்பேடு பஸ் நிலையம் அருகில் நந்தகுமாரை வரவழைத்து, மாணிக்கம் லஞ்ச பணத்தை கொடுக்கும் போது பிடிக்க திட்டமிடப்பட்டது. இதன்படி இன்று காலையில் மாணிக்கத்திடம் இருந்து ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நந்தகுமாரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.