70 ஆயிரம் சிகரட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது

271 0

1176712463untitled-1கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப்பிரிவினால் 70 ஆயிரம் சிகரட் தொகை மீட்கப்பட்டுள்ளது.

டுபாயில் இருந்து இன்று அதிகாலை இலங்கை வந்த நபர்களிடம் இருந்தே 70 ஆயிரம் சிகரட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, 3 சந்தேகநபர்கள் சுங்கப்பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சுமார் 35 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரட் தொகையே மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

65,38 மற்றும் 16 வயதுடைய குறித்த சந்தேகநபர்களுக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.