சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் விசேட சந்திப்பு!

249 0

slfp_777eஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் விசேட கூட்டம் ஒன்று இன்றைய தினம் நடைபெறவுள்ளது.சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவின் இல்லத்தில் இன்றிரவு 7.00 மணிக்கு இந்த விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய அரசியல் சூழ்நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது.இதற்கு மேலதிகமாக சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்தில் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட உள்ளதாகவும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான பொறிமுறைமை ஒன்று குறித்து ஆராயப்பட உள்ளதாகவும் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் நல்லாட்சி அரசாங்கத்திற்கான ஆதரவினை வாபஸ் பெற்றுக்கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த விசேட சந்திப்பு நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.