கடந்த காலத்தில் பல்வேறு சீர்குலைப்பு செயற்பாடுகளில் கடும் போக்காளர்கள் ஈடுபட்டனர். அவர்கள் என்ன கூறினாலும், வடக்கு – கிழக்கு மக்கள் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று காலை இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
சமகால நல்லிணக்க அரசாங்கம் கடந்த ஈராண்டுகளில் நெருக்கடியான பயணத்தை மேற்கொண்டிருந்தாலும், பல்வேறு வெற்றிகளைப் பெற்றுள்ளது.இதேவேளை, அரசியல் யாப்பு மறுசீரமைப்பு அவசரமாக மேற்கொள்ளப்பட மாட்டாது. எனவே, சில தரப்பினர் தெரிவிக்கும் கருத்துகளைக் கொண்டு மக்கள் குழப்பம் அடையத் தேவையில்லை.சகல கட்சிகளும் சுதந்திரமாக தமது கருத்துகளை தெரிவிக்கக்கூடிய ஜனநாயகம் இன்று நாட்டில் நிலவுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.