ஆளும் அரசாங்கத்திற்கு நிரந்தர வெளிநாட்டு கொள்ளை இல்லை – தினேஷ் குணவர்த்தன

370 0

dinesh-gunawarththana-01-01-2015-720x480-720x480தற்போதைய அரசாங்கத்திற்கு நிரந்தர வெளிநாட்டு கொள்ளை ஒன்று இல்லை என மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
‘அரசாங்கத்திற்கு எதிரான அதிகாரம் ஒன்றை கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளில் கீழ் கேகாலை – ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கம் சகல அபிவிருத்தி செயற்பாடுகளையும் நிறுத்தியுள்ளது.

சீனாவை தூற்றினார்கள்.

சீனாவின் செயற்திட்டங்கள் அவசியமில்லை என்றார்கள்.

தற்போதைய நிலவரம் என்னவென நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன கேள்வி எழுப்பினார்.