கம்பளையில் இன்று தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுப்பு

170 0

கம்பளை உடப்பலாத்த சுகாதார பிரிவுக்குட்பட்ட கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கும், 30 முதல் 60 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு இன்றைய தினம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இன்று முற்பகல் 9 மணி முதல் இன்று மாலை வரை தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெறவுள்ளதாக கம்பளை உடப்பலாத்த சுகாதார வைத்திய அதிகாரி எம்.எம் பாஹிம் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், 30 முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு புசல்லாவை நகர சபை மண்டபத்திலும் இன்று தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.