வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் இப்போதும் யுத்த சூழல் போன்றே உள்ளது – செல்வராசா கஜேந்திரன்

223 0

போர்முடிந்து இன்னமும் யுத்த சூழல் போன்று தான் வடகிழக்கு காணப்படுகின்றது. என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த 16ஆம் திகதி யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிலுள்ள கற்கோவளம் பகுதியில் தீர்த்தக்கரை என்னும் இடத்தில் இராணுவ முகாம் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருக்கின்றது.

இந்த இராணுவ முகாம் யுத்தம் முடிந்து தொடர்ந்தும் இன்னமும் அந்த இடத்திலே தான் முகாம் இருக்கின்றது.

அதிலே படையினர் முகாமிட்டு இருப்பதாலே பொதுமக்களுக்கு அச்சமான ஒரு நிலை தான் இருக்கின்றது. குறிப்பாக பெண்கள் தனியாக போக்குவரத்து செய்வதிலே ஒரு அச்ச நிலை இருக்கின்றது.

இலங்கையிலே இருக்கிற 20 டிவிசன் படைகளிலே 16 டிவிசன் படைகள் வடக்கு கிழக்கிலே நிலை கொண்டிருக்கின்றன.

அதிலும் வடமாகாணத்தில் 13 டிவிசன் படைகள் நிலை கொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இராணுவத்திற்காக காணி சுவீகரிக்கின்ற நடவடிக்கைகள் தான் படை தரப்பில் இருந்து அரசாங்க தரப்பில் இருந்து முன்னெடுக்கப்படுகின்றது. நாங்கள் இவற்றை வன்மையாக கண்டிக்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.