மட்டக்களப்பில் அதிகரிக்கும் தொற்றாளர்கள்!-வைத்தியர் நாகலிங்கம் மயூரன்

192 0

மட்டக்களப்பில் இதுரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 182 ஆக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன். இன்று (23) ஊடகங்களுக்கு தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும் களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், செங்கலடி, ஏறாவூர், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா ஒருவர் உட்பட 3 பேரும், வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர் உட்பட 10 பேர் கடந்த 24 மணித்தியாலயத்தில் உயிரிழந்துள்ளனர்

அதேவேளை களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 53 பேருக்கும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 52 பேருக்கும், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேருக்கும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேருக்கும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 27 பேருக்கும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேருக்கும்,

பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 25 பேருக்கும், வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேருக்கும், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 பேருக்கும், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 பேர் உட்டபட 250 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.