திருகோணமலையில் அங்கவீனர்களுக்கான கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம்!

179 0
திருகோணமலை மாவட்டத்திலுள்ள 60வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் வீடுகளில் தங்கியுள்ள அங்கவீனர்களுக்கான கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை தவிசாளர் தலைமையில் குறித்த வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
பொதுமக்களது வீடுகளில் இவ்வாறான யாரும் தங்கியிருப்பின் 0262222771 எனும் தொலைபேசி எண்ணுக்கு அழைப்பை ஏற்படுத்தி தங்கள் வீடுகளுக்கு தடுபூசிகளை வரவழைத்துக்கொள்ள முடியும் என பிரதேச சபை தலைவர் தெரிவித்தார்.