சீர்மிகு, சிங்கார- வந்தாரை வாழவைக்கும் தருமமிகு சென்னை: மு.க. ஸ்டாலின் வாழ்த்து

193 0

சென்னைக்கு இன்று 382-வது வயதாகும் நிலையில், சென்னை மாநகர மக்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

பழமையான வரலாற்று அடையாளங்களையும், புதுமையான தொழில்நுட்பத்தின் ஆச்சரியங்களையும் ஒருசேர கலவையாக தாங்கி நிற்கும் நகரம்தான் சென்னை.
தமிழகத்தின் தலைநகரம், இந்தியாவின் 4-வது பெரிய நகரம், உலகின் 31-வது பெரிய நகரம் என்ற சிறப்பை பெற்ற இந்த சென்னை மாநகரம், ஆண்டாண்டு காலமாக வாழ்வு தேடி வருபவர்களுக்கு எல்லாம் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்து வாழ்வளித்து வருகிறது. இந்த பாரம்பரிய நகரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது 382-வது பிறந்த நாளை கொண்டாடுகிறது.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டுவிட்டர் மூலம் சென்னை மாநகர மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘சீர்மிகு, சிங்கார – வந்தாரை வாழவைக்கும் தருமமிகு சென்னை, பல அடையாளங்களுக்கும் சிறப்புகளுக்கும் சொந்தமானது.
தொலைநோக்குப் பார்வையுடன் சென்னையின் வளர்ச்சிக்குப் பங்களித்தது திமுக அரசு; இனியும் தொடரும்.
சென்னை மாநகர மக்களுக்கு #MadrasDay வாழ்த்துகள்!’’ எனப் பதிவிட்டுள்ளார்.