இஸ்ரேலிய பிரதமர் குறித்து விசாரணை

291 0

israelஇஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு, வர்த்தகர்களிடம் இருந்து பெறுமதியான பரிசுகளை பெற்றுக்கொண்டார் என்ற சந்தேகத்தின் பேரில், இஸ்ரேலிய காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

பொது வாழ்வில் உள்ள ஒருவர் இவ்வாறான பரிசுப்பொருட்களை பெறுவது இஸ்ரேலிய சட்டத்திற்கு முரணானது என இஸ்ரேலிய சட்டமா அதிபர் அவிச்சை மண்டில்பிடிட் தெரிவித்துள்ளார்.

ஆரம்ப விசாரணைகள் மூலம் கிடைக்கப்பட்ட தகவலையடுத்து விசாரணைகளை தொடர சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார்.

இதற்கு ஏற்ற வகையில், பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு செல்லும் காவல்துறையினர் அவரின் வாக்குமூலத்தை பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல்துறையினரின் விசாரணைகளின் பின்னர், அது முற்றிலும் ஒரு புனைக்கதை என்பது வெளியாகும் என பிரதமரின் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்குள் நுழையும் காட்சியினை புகைப்படம் எடுப்பதற்காக ஏராளமான புகைப்பட ஊடகவியலாளர்கள் குழுமி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.